துன்பம் என்னும் காட்டில் இன்பம் என்ற வாழ்க்கையை இழந்தோம் - Silentstriker

Breaking

Knowledge information and ,Tamil and English story ,horror story ,Thrilled story, motivational story, கதைகள், திகில் கதைகள்

Thursday, January 12, 2023

துன்பம் என்னும் காட்டில் இன்பம் என்ற வாழ்க்கையை இழந்தோம்

                        படித்ததில் பிடித்தது

                                                       புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான். வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த அக்கணமே கதறி அழுதான். அவன் அழுது முடிக்கும் வரை பொறுத்திருந்த புத்தர் கனிவாக கேட்டார்; சகோதரா ஏன் இப்படி கண்ணீர் சிந்துகிறாய்? உனக்கு ஏற்பட்ட பிரச்சனையை என்னிடம் சொல், " பகவானே, என் வாழ்க்கையில் நான் எல்லையற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறேன். எடுத்த எதிலும் தோல்வி, தாங்க முடியாத துயரம் எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். புத்தர் அன்புடன் அவர் கையில் தண்ணீர் குவளையை கொடுத்தார். பிறகு உப்பையும் கொடுத்துவிட்டுச் சொன்னார்:

                                                        "சகோதரா, இந்தக் குவளையில் உப்பிட்டுக் கலக்கி அருந்து" அவன் உப்பைக் குவளையில் கலக்கி அருந்திப் பார்த்தான். இரண்டு மிடறு குடிப்பதற்குள் அவன் முகம் கோணியது மேற்கொண்டு குடிக்க முடியாமல் அப்படியே கிழே வைத்து விட்டு குடிக்க முடியவில்லை பகவானே மிகவும் கரிக்கிறது." புத்தர் மறுபடியும் இதோ இப்போதும்அதே அளவு உப்பை தருகிறேன் அதோ அந்த குளத்தில் கரைத்துவிடு" புத்தர் சொன்னபடி அவன் அந்த உப்பை எதிரிலிருந்த குளத்தில் கரைத்தான். இப்போது அந்த நீரை குடித்து பார்" உப்புக் கரைக்கப்பட்டபோதும் குளத்து நீரில் உப்பின் சுவை கொஞ்சம் கூட  தெரியவில்லை. அந்த இளைஞன் போதுமான அளவு நீர் குடித்துவிட்டுக் கரைக்கு வந்தான். நீ சிறிய குவளையில் இருந்த நீரிலும்  பிறகு இந்தக் குளத்து நீரிலும் கரைத்தது ஒரே அளவான உப்புதான். ஆனால் சிறிய குவளையில் தண்ணீர் கொஞ்சம் தான் இருந்தது. அதனால் தான் கரிப்பு சுவை அதிகமாக இருந்தது. குளத்தில் தண்ணீர் அதிகம் இருந்தது அதனால் தான் கரிப்பு சுவை தெரியவில்லை. துன்ப துயரங்கள் என்பவை இநத உப்பை போல தான். இவை வாழ்க்கை நெடுகிலும் வந்துகொண்டுதான் இருக்கும். இவற்றை தவிர்க்கவே முடியாது. ஆனால் நம் மனதை விசாலமாக்க முடியும். இப்போது உன் மனது அந்தச் சிறிய குவளையை போல் உள்ளது. அதனால் தான் வாழ்க்கைச் சிரமங்கள் உனக்கு துயரமளிக்கின்றன.


 

No comments:

Post a Comment