ரோஜாவின் ராஜா - Silentstriker

Breaking

Knowledge information and ,Tamil and English story ,horror story ,Thrilled story, motivational story, கதைகள், திகில் கதைகள்

Monday, November 14, 2022

ரோஜாவின் ராஜா

                                                   ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று இந்தியாவின் முதல் பிரதமராக 1947 ம் ஆண்டு பொறுப்பேற்கிறார். இந்தியாவில் காஷ்மீர் பிரச்சனைக்கு நேருதான் காரணமே என்ற கருத்து இன்றளவும் இருக்கிறது. ஆனால் சுதந்திர இந்தியாவின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு நேருதான் காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. நாடு அவர் கையில் கிடைத்தபோது பஞ்சம், அறியாமை என்று சிக்கித் தவித்தது. கல்வி கிடையாது, உணவு கிடையாது, தொழில் கிடையாது இவ்வாறான நிலையில்தான் இந்தியாவை கையிலெடுக்கிறார்.  முதல் 5 ஆண்டு திட்டம் 1951 - 56 விவசாயத்துறை 10% முன்னேற்றம் தொழில் துறையில் 40%  உயர்வு தேசிய வருமானம் 10.5% உயர்ந்தது. பக்ராநங்கல் அணைக்கட்டை தனது தெய்வமாப் பார்த்தார். 70% மின்சாரத்தை நாட்டிற்குள் கொண்டுவந்தார். பாலை நிலமாய் பாழ்பட்டுக் கிடந்த இந்தியாவை சோலை நிலமாய் மாற்றிக் கொடுத்தவர். கலப்புப் பொருளாதாரம் இந்தியாவிற்கு நேரு அளித்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும் அணிசேரா கொள்கை இது வெறும் வார்த்தை அல்ல ரஷ்யா, அமெரிக்கா என்ற 2 வல்லரசுகளுடன் சேராமல் தனித்துவத்துடன் செயல்பட்ட தங்கமகன் அவர். ஆட்சிகள் மாறலாம் கட்சிகள் மாறலாம் ஆனால் அவர்கண்ட மதசார்பற்ற ஜனநாயகம் மாறவில்லை 75 ஆண்டுகள் கழித்தும் அது காக்கப்படுகிறது என்றால் அதற்கு நேரு மிக முக்கிய காரணம். 

No comments:

Post a Comment