ஒருசில கேள்விகளுடன் என் எழுத்தை தொடங்குகிறேன்
உங்கள் வீட்டில் பாத்திரம் துலக்கும் வேலை யாருடையது? இதைக் கேட்டவுடன் சிலபேர் கூறுவீர்கள் அந்த வேலை வீட்டில் அனைவரும் செய்வதுதான் என்று ஆனால் அந்த கேள்வியை கேட்ட நொடி உங்கள் மனதில் யார் வந்து சென்றார்? 95% அம்மாவாக தான் இருப்பார். இதை கேட்க்குபொழுது நான் பெண்ணியம் பேசுவதாக நினைப்பீர்கள்.
பெண்ணியம் என்று கூறி சில பெண்கள் மது அருந்துவது, சிகிரட் குடிப்பது என செய்வது சரியா என்று கேட்பீர்கள் சில பேர். அந்த நிகழ்வுக்கு பலகோடி விமர்சனங்கள் வந்தன ஆனால் பல ஆண்டுகளாக பல ஆண்கள் மது அருந்துகின்றன. அப்பொழுது இந்த விமர்சககர்கள் எங்கு சென்றார்கள்? அதற்காக நான் பெண் குடிப்பது சரி என்று சொல்லவில்லை மது அருந்துவது பெண்ணோ, ஆணோ அது யார் செய்தாலும் தவறு என்று சொல்லிகொடுங்கள்.
இவ்வாறு பல கேள்விகளை தன்னுள் வைத்துகொண்டு அதற்கான விடைகளை தேடிகொண்டிருக்கும் ஒரு பெண்ணின் கதைதான் இது........
அடுத்த அத்தியாயதில் சந்திப்போம்......
No comments:
Post a Comment