எம் குலம் எங்கே? - Silentstriker

Breaking

Knowledge information and ,Tamil and English story ,horror story ,Thrilled story, motivational story, கதைகள், திகில் கதைகள்

Wednesday, October 19, 2022

எம் குலம் எங்கே?

  



                                             ஈராயிர ஆண்டுகளுக்கு முன்பு முப்பால் கண்டது. மூவாயிர ஆண்டுகளுக்கு முன் இலக்கணம் கண்டது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தய நாகரிகம் கொண்டது. இது வெறும் மொழியல்ல இது ஒரு நாகரிகம் தமிழ் எனது கலாச்சாரம் தமிழே எனது வாழ்வு இது அறம் சொல்லி புறம் சொல்லி எம் தரம் காத்த மொழி ஆனால் இன்று எங்கே தொலைந்தது இது மறந்து போனதா இல்லை இறந்து போனதா தமிழ் எங்கே? தமிழன் எங்கே? என் வாழ்வியல் நெறிமுறைகள் எங்கே இன்று அகிலம் ஆழும் மொழிகளுக்கு எல்லாம் அரிசுவடி கிடைக்காத காலத்திலே எம் மொழிக்கு இலக்கணம் கண்டு இலக்கியம் கண்ட எம் குலம் எங்கே அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம் என்று அரிசுவடி சொல்லி தந்த நம் பண்பாடு எங்கே மரபாச்சி    பொம்மையாயினும் அதற்கு மாராப்பு போட்டு விளையாடிய என் கலாச்சாரம் எங்கே ஆங்கிலம் தான் சிறந்தது ஆங்கில கல்வியே  உயர்ந்தது என்று தமிழன் ஏற்றுகொண்டானோ அந்த புள்ளியில் தொலைந்து போனது நம் பாரம்பரியம் அதில் இருடடிப்பு செய்யப்பட்டது நமது வாழ்வியல் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் கொண்டு தன் சுயத்தை இழந்து சூனியமாகி நிற்கின்றான் இப்போது புரிகிறதா மொழி என்பது   ஒரு கல்வியல்ல கலாசாரத்தை புறட்டிபோடும் வல்லமை வாய்ந்தது என்று. வள்ளுவம் எங்கள் வாய்மொழியாகும் பன்மொழி எங்கள் படிப்பினை ஆகும், அவன் கல்வியை தந்து உன் சிந்தனையை சீழ் பிடிக்க வைத்துவிட்டான் அவன் மொழி கற்பித்தான் அவன் உணவை உண்பித்தான் அவன் வழியை திணித்துவிட்டான் அவன் தந்த கோழி முட்டையிடும் ஆனால் அந்த முட்டை கோழியாகாது அவன் தரும் விதையில் தக்காளி வரும் ஆனால் அந்த தக்காளியில் விதை இருக்காது அவன் தரும் மாடு பால் தரும் ஆனால் அது சினையாவதற்கு அவன் தான் ஊசி தருவான் முட்டையில் தொடங்கி விதையில் வளர்ந்து மாட்டில் நிற்கின்றது அவன் அரங்கேற்றிய நாடகம் நாளை உன்னில் நிற்கும் மாட்டிற்கு தந்த ஊசி நாளை உனக்கும் தயாராகி கொண்டிருக்கிறது வேடிக்கை பார்க்க தயாரா? இல்லை உன் வீரியத்தை காட்ட தயாரா? இது வரை நீ கற்றது கல்வியல்ல வாழ்ந்தது வாழ்க்கையல்ல இதுவரை நீ கொண்டது உன் கலாசாரம் அல்ல எங்கோ தொலைத்துவிட்ட நம் கலாசாரத்தை எங்கு தேடுவது விடை தெரியாமல் முடிக்கிறேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 

No comments:

Post a Comment