Saturday, October 15, 2022

வல்லமை தாராயோ - 2

 அத்தியாயம் - 2

                     அடியே மாலதி எந்திரிடி 6 மணி ஆகுது பொம்பள பிள்ளை இவ்வுளவு நேரமா தூங்குறது விடியிரதுக்கு முன்னாடி எந்திரிக்குறதில்லையா

                      அவள் எந்திரித்து சோம்பல் முறித்துவிட்டு முகம் கழுவ சென்றால் அப்பொழுதுதான் கவனித்தால் அன்று அவளுக்கு மாதவிடாய் என்று அதை அம்மாவிடம் கூறினால். அவள் அம்மாவோ தலைக்கு குளிச்சுபிட்டு திண்ணையில உட்காந்துரு வீட்டில எந்த பொருளையும் தொட்டுறாத என கூறிவிட்டு வயலுக்கு சென்றுவிட்டார்.

                     அடுத்த நாள் அவளுக்கு 10த் ரிசலட் அவள் அதனால் மனதில் பயம்கலந்த உற்சாகத்துடன் இருந்தால். 

                       ஆனால் அவள் வீட்டில் உள்ளவர்களுக்கு அந்த எண்ணம் துளிகூட இல்லை.

                        அடுத்த நாள் காலை அவள் பள்ளியிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அவள் தான் பள்ளியில் முதல் இடம் அதை கேட்டவுடன் மகிழ்ச்சியில் அம்மா அம்மா என்று அழைத்தால்  

அவள் அம்மா...

                       ஏன்டீ இப்பிடி கத்துற அம்மா நான் பள்ளியில் முதல் இடம் மகிழ்ச்சியாக கூறினால் அவள் அம்மாவோ அப்படியா சரி நான் தோட்டதுக்கு கத்திரிக்கா புடுங்க போறேன் அப்பா வந்தா தம்பிய சாப்பாடு போட சொல்லு நீ தான் வீட்டுக்கு தூரம்ல என கூறிவிட்டு சென்றுவிட்டார்.

                       இரண்டு வருடம் கழித்து 12ம் வகுப்பிலும் அவள்தான் முதலிடம். அவளுக்கு MBA படிக்கவேண்டும் என்று ஆசை. அதை அவள் அப்பாவிடம் சொல்வதற்காக காத்துகொண்டிருந்தால் ஆனால் அவளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 

                    அவள் அப்பா வீட்டிற்கு நுழைந்ததும் நாளைக்கு உன்ன பொண்ணு பாக்க வராங்க தயாரா இரு என கூறினார்


அவள் கனவில் இடி விழுந்தது. அவள் அதிர்ச்சியில் உறைந்து போனால்........


அடுத்த அத்தியாயதில் சந்திப்போம்......

No comments:

Post a Comment