தன் கனவில் இடி விழுந்த அந்த நொடி அவள் மனம் கோபத்தில் கொந்தளித்தது.
போதும் நிறுத்துங்க அப்பா என் மனசுல என்ன இருக்கு கேட்டீங்களா என்னோட கனவில இப்படி மன் அள்ளி போடுறீங்க நான் படிக்கனும் என்னால இப்போல கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது.
உங்கிட்ட என்ன கேக்கனும் உனக்கு எது நல்லது எனக்கு தெரியும்.
என் கல்யாணத்தை பத்தி என்கிட்ட கேக்காம நீங்களா ஒரு முடிவு எடுத்து வச்சீருக்கீங்க எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்ல,
அப்பாவ எதிர்த்து பேசுற ( அவளை அடித்து கொண்டிருக்கிறாள் அவள் தாய்). பார்த்து பேசு அக்கம் பக்கதில கேட்டா என்ன ஆகுறது நீ விலை போற மாடு இப்ப படிச்சு என்ன கோட்டையா கட்ட போற அதான் அப்பா சொல்றாருல நாளைக்கு நீ தயாரா இருக்கனும் இதான் முடிவு.
ஒவ்வொரு நிமிசமும் வயித்தில நெருப்ப கட்டிட்டு இருக்க மாதிரி இருக்கு உன்ன கரை சேர்த்தா தான் எங்களோட பெரிய பாரமே குறையும். அவள் அழுது கொண்டே அவள் அறையில் சென்று படுத்துவிட்டாள்.
அடுத்த நாள் காலை.
அவளின் அம்மா அவளை தயார் ஆகு என்று கூறிவிட்டு மாப்பிள்ளை வீட்டாருக்கு தேவையான வடை, போன்டா செய்வதில் ஆய்த்தமானாள். சிறிது நேரம் கழித்து மாலதியை வந்து பார்த்தாள் அவள் தயாராகாமல் இருந்தாள். தயாராக சொன்னான் அப்படியே சிலை மாறி உக்காந்துருக்கா மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க முன்னாடி எங்கள அசிங்க படுத்த பாக்குறியா என் அதட்டினாள். மாலதி உடனே தயாராக ஆய்த்தமானால். பின்பு அனைவருக்கும் தெரிந்ததுதான் மாப்பிள்ளை வீட்டார் முன் காட்சிபொருளாக நிற்கப்பட்டாள். மாப்பிள்ளை வீட்டார் அனைவருக்கும் பாரதியை பிடித்து போனது. பின்பு வரதட்சனை பற்றி பேசினார்கள். இன்னும் ஆறு மாதங்களில் கல்யாணத்தை வச்சுக்குவோம் என முடிவு செய்தனர்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்......................................................