Saturday, January 21, 2023

நிதானம் பிரதானம்


                          படித்ததில் பிடித்தது

எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டைபோட்டு நாசம் செய்யும். 

               அதே எலி அதெற்கென வைக்கப்பட்ட  மரபொறியில் சிக்கிக் கொண்டால் எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும்  அலையுமே தவிர மற்ற மரப்பொருட்களை  ஓட்டை போட்டது போல இம்மர பொறியையும் ஓட்டை போட்டு தப்பித்துவிடலாம் என யோசிக்கவே யோசிக்காது.ஆமாம் இப்படி யோசித்தால் அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். 

                 ஆனால் மரபொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து  நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும் அது தன்னால் வெளிவரமுடியாத ஏதோ ஒரு பொறியில் சிக்கிகொண்டோம்  என அங்கும் இங்கும் அலைபாயும். 

                   நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும். 

                   அதற்கே உயிர்பிளைக்க வழி தெரிந்தாலும் அந்தநேரத்தில் அதன் மூளை வேளை செய்யாது. 

                    மனிதனும் பல நேரங்களில் இப்படிதான்  பல பிரச்னைகளிலிருந்து வெளியே வர வழி இருந்தும் பொறுமை இல்லாததால் வாழ்கையை இழக்கிறான்.


Friday, January 20, 2023

பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும்

 1) மருவிய பழமொழி:

களவும் கற்று மற

சரியான பழமொழி: 

களவும் கத்து மற 

அர்த்தம்: 

களவு - திருடுதல், கத்து - பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

2) மருவிய பழமொழி: 

வக்கத்தவன் வாத்தியார் போக்கத்தவன் போலீஸ் 

சரியான பழமொழி: 

வாக்கு அறிந்தவன்  வாத்தியார் போக்கு அறிந்தவன் போலீஸ்

3) மருவிய பழமொழி:

நல்ல மாட்டுக்கு ஒரு சூடுதான்

சரியான பழமொழி: 

நல்ல மாட்டுக்கு ஒரு சுவடுதான்

அர்த்தம்: 

மாட்டின் அடிசுவட்டை வைத்தே அதன் வலிமையையும், உடல்நலத்தையும் கணித்ததை இப்பழமொழி உணர்த்துகிறது.

Thursday, January 12, 2023

துன்பம் என்னும் காட்டில் இன்பம் என்ற வாழ்க்கையை இழந்தோம்

                        படித்ததில் பிடித்தது

                                                       புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான். வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த அக்கணமே கதறி அழுதான். அவன் அழுது முடிக்கும் வரை பொறுத்திருந்த புத்தர் கனிவாக கேட்டார்; சகோதரா ஏன் இப்படி கண்ணீர் சிந்துகிறாய்? உனக்கு ஏற்பட்ட பிரச்சனையை என்னிடம் சொல், " பகவானே, என் வாழ்க்கையில் நான் எல்லையற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறேன். எடுத்த எதிலும் தோல்வி, தாங்க முடியாத துயரம் எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். புத்தர் அன்புடன் அவர் கையில் தண்ணீர் குவளையை கொடுத்தார். பிறகு உப்பையும் கொடுத்துவிட்டுச் சொன்னார்:

                                                        "சகோதரா, இந்தக் குவளையில் உப்பிட்டுக் கலக்கி அருந்து" அவன் உப்பைக் குவளையில் கலக்கி அருந்திப் பார்த்தான். இரண்டு மிடறு குடிப்பதற்குள் அவன் முகம் கோணியது மேற்கொண்டு குடிக்க முடியாமல் அப்படியே கிழே வைத்து விட்டு குடிக்க முடியவில்லை பகவானே மிகவும் கரிக்கிறது." புத்தர் மறுபடியும் இதோ இப்போதும்அதே அளவு உப்பை தருகிறேன் அதோ அந்த குளத்தில் கரைத்துவிடு" புத்தர் சொன்னபடி அவன் அந்த உப்பை எதிரிலிருந்த குளத்தில் கரைத்தான். இப்போது அந்த நீரை குடித்து பார்" உப்புக் கரைக்கப்பட்டபோதும் குளத்து நீரில் உப்பின் சுவை கொஞ்சம் கூட  தெரியவில்லை. அந்த இளைஞன் போதுமான அளவு நீர் குடித்துவிட்டுக் கரைக்கு வந்தான். நீ சிறிய குவளையில் இருந்த நீரிலும்  பிறகு இந்தக் குளத்து நீரிலும் கரைத்தது ஒரே அளவான உப்புதான். ஆனால் சிறிய குவளையில் தண்ணீர் கொஞ்சம் தான் இருந்தது. அதனால் தான் கரிப்பு சுவை அதிகமாக இருந்தது. குளத்தில் தண்ணீர் அதிகம் இருந்தது அதனால் தான் கரிப்பு சுவை தெரியவில்லை. துன்ப துயரங்கள் என்பவை இநத உப்பை போல தான். இவை வாழ்க்கை நெடுகிலும் வந்துகொண்டுதான் இருக்கும். இவற்றை தவிர்க்கவே முடியாது. ஆனால் நம் மனதை விசாலமாக்க முடியும். இப்போது உன் மனது அந்தச் சிறிய குவளையை போல் உள்ளது. அதனால் தான் வாழ்க்கைச் சிரமங்கள் உனக்கு துயரமளிக்கின்றன.


 

Tuesday, January 3, 2023

விழுந்தாலும் விதையாக விழுவோம்

                                                                   சந்தையில் பேரம் பேசி வாங்கி வந்த இரண்டு கிலோ வெங்காயத்தில் இரண்டு மூன்று வெங்காயங்கள் அழுகிபோக வேண்டாம் என்று அதை நான் மண்ணில் எறிய, பத்து நாட்களுக்கு பிறகு ஏதேச்சையாக அதை கவனிக்க பச்சைபசசேலென முளைத்த குறுத்து கண்ணில்பட்டது. இது என்ன பெரிதாக தளிர்த்து விடப்போகிறது என்று நான் அலெட்சியமாக செல்ல, அந்த பச்சைபசேலென முளைத்த குறுத்து மண்ணோடு இறுகி சங்கமிக்க. அந்த நிகழ்விற்கு வானம் அவ்வப்போது நீர் இறைக்க, விழுந்த நீரின் வேகம் தாளாமல் மேலெழுந்த மண்புழுக்கள் குறுக்கும் நெடுக்குமாக நகர்ந்த அதற்கு ஒளி சேர்க்க இரண்டு மாதம் கழித்து அது செடியாக உருவெடுத்தது.

                                                                   முயன்றால் முடியாது என ஒன்றுமில்லை என நான் வேண்டாம் என எறிந்த வெங்காயம் என்னை பார்த்து சொல்கிறது.




                              விழுந்தாலும் விதையாக விழுவோம்